அன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது !தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை !ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் !என் தாய் என் அருகில் இல்லை

திங்கள், 30 ஏப்ரல், 2012

முதலெழுத்து


கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?

அம்மா.....................

என்றால் அம்மாஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மா
உயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மா
என்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மா
ஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மா
ஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மா
எஃகின் உறுதி அம்மா

தெய்வம்


தாய் தெய்வம் கண்முன்னே இருக்க – நீ
கல் தெய்வம் தேடுவதேனோ !
காரிருளில் கருவறையில்
எமை கண்ணென காத்து
தன் உடல் வாடி
எமக்கு உயிர் கொடுத்த தெய்வம்
அம்மா அம்மா அம்மா என்று
நான் அழைக்கிறேன் அதை நீ
கேட்பதற்கு என்னுடன் நீ இல்லை ……….

அம்மா என் அம்மா......

ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்த குரலில் கலந்து வரும்
உரிமையை உணர் வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்கு தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுத துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளை பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்கு தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை

அம்மா என் அம்மா...

அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னை தூங்க வைப்பாள்
என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..
என் பக்கத்தில் வந்து..
என் தலையை வருடியபடி..
என் நெற்றியில் முத்தமிட்டு..
காலை வணக்கம் சொல்லி ..
சிரிப்புடன் அரவணைப்பாள்
என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..
பாடல்களையும் படித்து காட்டி
தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து
நன்றாக படிக்க சொல்லி
உற்சாகமும் தருகிறாள்
என் அம்மா...!

நான் கோபத்தில்
சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் எதோ சொல்லி
என்னை சமாதான படுத்தி..
எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள்
என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..
பட படர்த்த இதயத்துடன்
துடி துடித்த பார்வையுடன்
என் காயத்துக்கும் மருந்து போடுவாள்
என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா..
என் அன்புத் தெய்வம் நீதானம்மா...!

செவ்வாய், 20 மார்ச், 2012

அம்மா


ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று என்னாமல்

பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடில்லை
ஊண் உறக்கம் மறந்து
எம்மை உயிரைப் போல் காப்பவள்.......
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்

அன்னையே உன் பாசத்துக்கு
ஈடு இணையேது
ஆண்டவன் கூட
மண்டியிடுவான் உன் பாசத்துக்கு

வியாழன், 23 செப்டம்பர், 2010

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!